அரசினர் இந்து மகா வித்தியாலயம் வாழ்க
அன்னையர் தந்தையர் அனைவரும் வாழ்க
சீர் நிமிர்ந்தெங்கனும் சிறப்புடன் வாழ்கவே
சீரிய கல்வி செல்வமே சூழ்கவே
வாழ்க… வாழ்க… வாழ்க…
வள்ளுவன் பாரதி இளங்கோ கம்பனில்லம்
வளர்ந்தோங்கும் அறிவுடன் வாழ்த்திடும் உள்ளம்
கல்வியும் கடமையும் கற்றவர் செல்வம்
கருணையின் உருவே கண்கண்ட தெய்வம்
வாழ்க… வாழ்க… வாழ்க…
சாந்தி சமாதானம் சமத்துவம் வேண்டும்
சத்தியமே என்றும் நித்தியம் வேண்டும்
மாந்தருள் ஆசிரியர் மதிப்புள்ள குருவாம்
மாநிலத்தில் அவரே மாண்புள்ள திருவாம்
வாழ்க… வாழ்க… வாழ்க…
நல்லவர் உள்ளம் நல்கிய நிலையம்
செல்வநாயகபுரத்தினில் உதயம்
வல்லவர் கொடையினில் மகிழ்ந்தனர் இதயம்
கல்வியினால் இங்கு பிறந்திடும் சரிதம்
வாழ்க… வாழ்க… வாழ்க…







